தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திர பவார் கட்சியின் புதிய சின்னம் அறிமுகம்


தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திர பவார் கட்சியின் புதிய சின்னம் அறிமுகம்
x

Image Courtesy : @NCPspeaks

ராய்காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சரத்பவார் முன்னிலையில் கட்சியின் புதிய சின்னம் அறிமுகம் செய்யப்பட்டது.

புதுடெல்லி,

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சரத் பவாரின் மருகனமான அஜித் பவார், தனக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதால் தங்களுடைய அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என அறிவிக்கக் கோரி மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் அஜித் பவாருக்கு ஆதரவாக முடிவு அமைந்தது. இதன்படி, தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னம் ஆகியவற்றை அஜித் பவாருக்கு கொடுப்பது என தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதே சமயம், சரத் பவார் தலைமையிலான கட்சிக்கு 'தேசியவாத காங்கிரஸ் கட்சி - சரத்சந்திர பவார்' என்ற பெயரும், 'துர்ஹாவை ஊதும் மனிதன்' (Man Blowing Turha) என்ற சின்னமும் வழங்கப்பட்டது. 'துர்ஹா' என்பது பாரம்பரிய இசைக்கருவியாகும்.

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திர பவார் கட்சியின் புதிய சின்னம் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. மராட்டிய மாநிலம் ராய்காட்டில் கட்சித்தலைவர் சரத்பவார் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் புதிய சின்னம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.



1 More update

Next Story