பயிற்சியின் போது பாராசூட் மின்கம்பியில் சிக்கி கடற்படை கமாண்டோ உயிரிழப்பு


பயிற்சியின் போது பாராசூட் மின்கம்பியில் சிக்கி கடற்படை கமாண்டோ உயிரிழப்பு
x

பாராசூட் பயிற்சியின் போது உயர் மின்னழுத்த மின் கம்பியில் பாராசூட் சிக்கியதால் கடற்படை கமாண்டோ உயிரிழந்தார்.

ஜம்மு காஷ்மீர்,

பாராசூட் பயிற்சியின் போது உயர் மின்னழுத்த மின் கம்பியில் பாராசூட் சிக்கியதால் கடற்படை கமாண்டோ அங்குர் சர்மா உயிரிழந்தார்.

ஜம்மு காஷ்மீரில் பணியமர்த்தப்பட்ட அங்குர் சர்மா, ஆக்ராவின் விமானப்படை தளத்தின் வான்வழிப் பயிற்சிப் பள்ளியில் பாராட்ரூப்பிங் பயிற்சி பெற்று வந்தார். அவரது பயிற்சியின் ஒரு பகுதியாக, வெள்ளிக்கிழமை காலை ஒரு பாராசூட்டைப் பயன்படுத்தி விமானத்தில் இருந்து குதித்தார். இந்த நிலையில் அவரது பாராசூட் உயர் மின்னழுத்த மின்கம்பியில் சிக்கியது.

வயல்களில் பணிபுரிந்த விவசாயிகள், கமாண்டோ மின்கம்பியில் சிக்கியதைக் கண்டு, உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். இந்த நிலையில் தன்னைத் தானே பிரித்துக் கொள்ள முயன்ற அங்குர் சர்மா அங்கிருந்து விழுந்து காயமடைந்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், அங்குர் சர்மாவை ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் சர்மா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Next Story