கடபா அருகே மோட்டார் சைக்கிளில் விபத்தில் சிக்கி தொழிலாளி பலி
கடபா அருகே மோட்டார் சைக்கிளில் விபத்தில் தொழிலாளி பலியானார்.
மங்களூரு-
தாவணகெரே மாவட்டத்தை சேர்ந்தவர் மஞ்சு. இவர் தற்போது தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகா கொடிம்பாலா பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மஞ்சு பணி முடிந்து இரவு மோட்டார் சைக்கிளில் கொடிம்பாலா நோக்கி சென்று கொண்டு இருந்தார். மோட்டார் சைக்கிள் கல்லாந்தடுக்கா அருகே சென்றபோது சாலையின் வளையில் மோட்டார் சைக்கிளை மஞ்சு திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் பாய்ந்தது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து மஞ்சு தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மஞ்சு பரிதாபமாக இறந்தார். இதகுறித்து கடபா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.