ஈட்டி எறிதல் - உலகின் முதல்நிலை வீரரானார் நீரஜ் சோப்ரா
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தரவரிசையில் உலகின் முதல்நிலை வீரரானார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா.
புதுடெல்லி,
டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு ஈட்டி எறிதலில் தங்கம் வென்று கொடுத்தவர் நீரஜ் சோப்ரா. ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுத்த முதல் தடகள வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் நீரஜ் சோப்ரா. கடந்த 5-ம் தேதி தோஹா டயமண்ட் லீக்கில் தங்கம் வென்றதன் மூலம் தனது 2023 சீசனை வெற்றிகரமாக தொடங்கினார். இப்போட்டியில் நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்தார்.
இப்போது ஈட்டி எறிதல் வீரர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 1455 புள்ளிகளுடன் நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்துள்ளார். ஆண்டர்சன் பீட்டர்ஸ் என்ற வீரர் 1433 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளார். செக் குடியரசின் ஜாகூப் 3ம் இடத்தில் உள்ளார்.
ஈட்டி எறிதல் வீரர்கள் தரவரிசை:
1. நீரஜ் சோப்ரா - 1455 புள்ளிகள்
2. ஆண்டர்சன் பீட்டர்ஸ் - 1433 புள்ளிகள்
3. ஜாகூப் வத்லேஜ் - 1416 புள்ளிகள்
4. ஜூலியன் வெபர் - 1385 புள்ளிகள்
5. அர்ஷத் நதீம் - 1306 புள்ளிகள்
உலக தடகள வரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார் நீரஜ் சோப்ரா.