நீட் முதுநிலை தேர்வில் கட் ஆப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைப்பு..!


நீட் முதுநிலை தேர்வில் கட் ஆப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைப்பு..!
x
தினத்தந்தி 20 Sept 2023 7:11 PM IST (Updated: 20 Sept 2023 10:05 PM IST)
t-max-icont-min-icon

நீட் முதுநிலை தேர்வில் கட் ஆப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இளநிலை மருத்துவ படிப்புகள் மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தகுதித்தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. நாடு முழுவதும் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி அதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நீட் முதுநிலை தேர்வில் தகுதி மதிப்பெண் (கட் ஆப்) மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் ஜீரோவாக எடுத்திருந்தாலும் எம்.டி, எம்.எஸ்., படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.

மேலும் ஏற்கனவே 2 சுற்று முதுநிலை மருத்துவ கலந்தாய்வு முடிந்த நிலையில் 3-வது சுற்றுக் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணாக்கர்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பேண் எடுத்தாலும் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

நீட் முதுகலை படிப்புகளுக்கான தகுதி சதவீதம் (மருத்துவம்/ பல் மருத்துவம்) என்பது விண்ணப்பதாரர்களின் கலந்தாய்வில் அனைத்து வகைகளிலும் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்ய தேவையில்லை. இருப்பினும், அவர்கள் தங்கள் விருப்பங்களைத் திருத்த அனுமதி அளிக்கப்படும்.

முதுநிலை கலந்தாய்விற்கான சுற்று-3 முதல் புதிய அட்டவணை விரைவில் மருத்துவ கலந்தாய்வுக் குழு இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் புதுப்பிப்புகளுக்கு மருத்துவ கலந்தாய்வுக் குழு இணையதளத்துடன் தொடர்பு கொள்ளுமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story