நீட் தேர்வு: மே 27ஆம் தேதிக்குள் திருத்தம் மேற்கொள்ளலாம் - தேசிய தேர்வு முகமை


நீட் தேர்வு: மே 27ஆம் தேதிக்குள் திருத்தம் மேற்கொள்ளலாம் - தேசிய தேர்வு முகமை
x

கோப்புப்படம்

நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களில் மே 27-ம் தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆகிய மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் நீட் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு வரும் ஜூலை 17-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு, கடந்த ஏப்ரல் 6-ந் தேதி தொடங்கி மே 20-ம் தேதி வரை நடைபெற்றது. தேர்வுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களில் மே 27-ம் தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அவற்றை https://neet.nta.nic.in என்ற இணையதளம் வழியாக வரும் 27-ம் தேதிக்குள் மேற்கொள்ள வேண்டும் என்றும், ஹால்டிக்கெட் பெறுதல், தேர்வு மையங்கள் விவரம் உள்ளிட்டவை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூடுதல் தகவல்களை https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் அறியலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011- 40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.


Next Story