4 நாட்கள் சுற்றுப்பயணமாக நேபாள பிரதமர் இன்று இந்தியா வருகிறார்..!


4 நாட்கள் சுற்றுப்பயணமாக நேபாள பிரதமர் இன்று இந்தியா வருகிறார்..!
x

4 நாட்கள் சுற்றுப்பயணமாக நேபாள பிரதமர் இன்று இந்தியா வருகிறார்.

புதுடெல்லி,

நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா, அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வருகிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் 4 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவருடன் உயர்மட்டக் குழுவினரும் வருகின்றனர்.

இந்த சுற்றுப்பயணத்தின்போது இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோரை பிரசந்தா சந்தித்துப் பேச உள்ளார். பிரதமர் மோடியை சந்தித்து இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக உஜ்ஜைன் மற்றும் இந்தூருக்கும் செல்கிறார்.

நேபாள பிரதமர் பிரசந்தா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பதவியேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story