சாக்கடை கால்வாயில் ஸ்கூட்டர் கவிழ்ந்து நேபாள பெண் சாவு
பெங்களூருவில் சாக்கடை கால்வாயில் ஸ்கூட்டர் கவிழ்ந்து நேபாள பெண் உயிரிழந்தார்.
பெங்களூரு:
நேபாளத்தை சேர்ந்தவர் தாரா படாயிக் (வயது 23). இவர், பெங்களூருவில் தங்கி இருந்து சமையல் வேலை செய்து வந்தார். நேற்று அதிகாலையில் வேலைக்கு சென்றுவிட்டு தனது ஸ்கூட்டரில் தாரா வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது தனது நண்பரான திலீப்பையும் அவர் ஸ்கூட்டரில் அழைத்து வந்தார். சாராய் பாளையா அருகே எச்.பி.ஆர். லே-அவுட் முக்கிய ரோட்டில் வரும்போது தாராவின் கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டர், அங்கிருந்த சாக்கடை கால்வாய்க்குள் கவிழ்ந்தது.
இதில், தலையில் பலத்தகாயம் அடைந்த தாரா படுகாயம் அடைந்து இறந்து விட்டார். படுகாயம் அடைந்த திலீப் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பானசாவடி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story