தேசிய கொடியை தழுவி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் புதிய நிறம் மாற்றம்; மத்திய ரெயில்வே மந்திரி


தேசிய கொடியை தழுவி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் புதிய நிறம் மாற்றம்; மத்திய ரெயில்வே மந்திரி
x

தேசிய கொடியை தழுவி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் புதிய நிறம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது என மத்திய ரெயில்வே மந்திரி கூறியுள்ளார்.

சென்னை,

நாடு முழுவதும் தற்போது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று உள்ளது. இந்த ரெயில், சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த ரெயிலில் தானியங்கி கதவுகள், ஏ.சி. வசதி, வைபை வசதி, ஜி.பி.எஸ்., ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் போன்ற பல வசதிகள் உள்ளன. இந்த நிலையில், புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆனது காவி நிறம் பூசப்பட்டு காணப்படுகிறது.

அது இன்னும் இயக்கப்படவில்லை. சென்னை தொழிற்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. சோதனை அடிப்படையில் இந்த ரெயிலின் நிறம் காவி வர்ணம் பூசப்பட்டு உள்ளது என ரெயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த தொழிற்சாலையை மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் நேற்று பார்வையிட்டார். தென்னிந்திய ரெயில்வேயின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மறுஆய்வு செய்ததுடன், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் செய்யப்பட்ட மேம்பட்ட விசயங்களை பற்றியும் ஆய்வு மேற்கொண்டார்.

அவர் புதிய நிறம் பற்றி கூறும்போது, இந்தியாவின் மூவர்ண கொடியின் தாக்கத்தினால் இந்த உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் நிறம் மாற்றப்பட்டு உள்ளது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 25 முன்னேற்றத்திற்குரிய விசயங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்த அனைத்து மேம்படுத்தப்பட்ட விசயங்களும் ரெயிலின் வடிவமைப்பில் மாற்றம் செய்ய பயன்படுத்தப்படுகின்றன என அவர் கூறியுள்ளார்.


Next Story