ஜூலை 1 முதல் அமலாகிறது டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கான டோக்கனைசேஷன் விதிமுறை


ஜூலை 1 முதல் அமலாகிறது டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கான டோக்கனைசேஷன் விதிமுறை
x

Image Courtesy : PTI 

எந்தவொரு வணிகரும் வாடிக்கையாளரின் கார்டு தரவை இனி சேமிக்க முடியாது.

புதுடெல்லி,

இந்திய ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு டோக்கனைசேஷன் செய்வதற்கான விதிமுறையை கடந்த ஆண்டு வகுத்து இருந்தது. அதாவது கார்டு பரிவர்த்தனையில் ஈடுபடும் எந்தவொரு வணிகரும் வாடிக்கையாளரின் அட்டைத் தரவை இனி சேமிக்க முடியாது என்பதே டோக்கனைசேஷனாகும். இதற்கான காலக்கெடுவாக இந்தாண்டு ஜனவரி 1-ம் தேதி நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

டோக்கனைசேஷனுக்கு மாறும் வகையில் அதிக அவகாசம் தேவை என்று தொழில்துறை அமைப்புகளின் கோரிக்கையைத் தொடர்ந்து இது ஜூலை 1 வரை நீட்டிக்கப்பட்டது. இதனால் ஜூன் 30ஆம் தேதிக்கு பிறகு வாடிக்கையாளர்களின் கார்டு தரவை வணிகர்கள் தங்கள் சர்வர்களில் சேமித்து வைப்பதை இந்திய ரிசர்வ் வங்கி தடை செய்கிறது.

கார்டு-டோக்கனைசேஷன் நடைமுறைக்கு வருவதால் ஜூலை 1 ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளை செய்யும் முறையில் மாற்றம் ஏற்படவுள்ளது. இதனால் இனி இதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட டோக்கனைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகள் நடைபெறும். இந்த புதிய விதிமுறைகளால் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story