புத்தக அறிவு பெறும் நிலையை புதிய கல்வி கொள்கை மாற்றும்: பிரதமர் மோடி
காந்தி நகரில் அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்
காந்திநகர்,
குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று காந்தி நகரில் அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
மாணவர்களுக்கு முன்பு புத்தக அறிவை கொடுத்து வந்தோம். புதிய கல்விக்கொள்கை அறிமுகம் செய்யப்பட்டதும் அந்த நிலை மாறும். குழந்தைகளுக்கு ஆரம்பக்கல்வி அவர்களின் தாய்மொழியில் வழங்கவேண்டியது அவசியம்.
புதிய கல்விக்கொள்கையில் அதற்கான அம்சங்கள் இருக்கிறது. என் வாழ்நாளில் நான் ஆசிரியராக இருந்ததில்லை, ஆனால் வாழ்நாள் முழுவதும் சமூக சூழ்நிலைகளை நுணுக்கமாக படிக்கும் மாணவனாக இருக்கிறேன். உலக தலைவர்களை நான் சந்திக்கும்போது அவர்களில் சிலர், அவர்களின் ஆசிரியர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்தனர். .
Related Tags :
Next Story