புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 7 Sep 2023 6:45 PM GMT (Updated: 7 Sep 2023 6:47 PM GMT)

வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மைசூரு

காதல் விவகாரம்

மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகா அரே பொம்மனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது25). இந்தநிலையில் குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா ஏரவார பகுதியை சேர்ந்தவர் தர்மா.

இவரது மகள் ஜோதிகா(19). இவர் டி.நரசிப்புரா டவுனில் விடுதியில் தங்கி கல்லூரியில் படித்து வந்தார்.

அப்போது சதீசிற்கும், ஜோதிகாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இதையடுத்து அவர்கள் 2 பேரும் தங்களது காதலை செல்போன் மூலம் பேசி வளர்த்து வந்தனர். இந்தநிலையில் இதற்கு ஜோதிகாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை மீறி சதீஷ், ஜோதிகா காதலித்து வந்தனர்.

பெற்றோர் எதிர்ப்பு

இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு டி.நரசிப்புராவில் கிராமமக்கள் முன்னிலையில் சதீஷ், ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து பெற்றோர் ஜோதிகாவிடம் பேசுவதை நிறுத்தி விட்டனர். இந்தநிலையில் சதீஷ், ஜோதிகா சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.

கடந்த சில நாட்களாக அவர், ஜோதிகாவிடம் வரதட்சணை கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். இதனால் அவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வீட்டில் ஜோதிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த டி.நரசிப்புரா டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜோதிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

இதற்கிடையே ஜோதிகாவின் பெற்றோர் டி.நரசிப்புரா டவுன் போலீசில் புகார் அளித்தனர். அதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மகள் (ஜோதிகா) எங்களுக்கு செல்போன் மூலம் பேசினார்.

அப்போது சதீசிடம் என்னால் வாழ முடியாது. அவர் என்னை வரதட்சணை கொடுமை செய்கிறார். இதனால் நான் ஊருக்கு வந்து விடுவேன் என தெரிவித்தாள்.

அதற்கு நாங்கள் சமாதானப்படுத்தி, விநாயகர் சதுர்த்தி பண்டிகை முடிந்தவுடன் உன்னை அழைத்து வருகிறோம் என கூறினோம்.

அதற்குள் ஜோதிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து உள்ளார். எனவே ஜோதிகா தற்கொலைக்கு காரணமான சதீஷ் மீது போலீசார் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து டி.நரசிப்புரா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story