அசாமில் அனைத்து மதரஸாக்களையும் மூடுவோம்: முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா


அசாமில் அனைத்து மதரஸாக்களையும் மூடுவோம்: முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா
x

புதிய இந்தியாவிற்கு மதரஸாக்களுக்கு பதிலாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள்தான் தேவை என்று ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

கவுகாத்தி,

கர்நாடகாவின் பெலகாவியில் நடைபெற்ற ஒரு பேரணியில் உரையாற்றிய அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா, தங்கள் மாநிலத்தில் அனைத்து மதரசாக்களையும் மூடுவோம் என்று பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- "புதிய இந்தியாவிற்கு மதரஸாக்களுக்கு பதிலாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள்தான் தேவை. தனது அரசாங்கம் ஏற்கனவே 600 மதரஸாக்களை மூடிவிட்டது. மற்ற அனைத்தையும் விரைவில் மூட இருக்கிறோம். மேலும், எங்களுக்கு மதரஸாக்கள் தேவையில்லை, பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்கள்தான் தேவை" என்றார்.


Next Story