அயோத்தியில் புதிய மசூதி கட்டுமான பணியை மே மாதம் தொடங்க திட்டம்


அயோத்தியில் புதிய மசூதி கட்டுமான பணியை மே மாதம் தொடங்க திட்டம்
x

அயோத்தியில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் தன்னிபூர் என்ற கிராமத்தில் புதிய மசூதி கட்டப்படுகிறது.

அயோத்தி:

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து, அந்த நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2019ம் ஆண்டு இறுதி தீர்ப்பை வழங்கியது. அப்போது, மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியதுடன், அந்த இடத்தை இந்துக்களுக்கு வழங்க உத்தரவிட்டது. அதேசமயம், முஸ்லிம்களுக்கு மசூதி கட்டுவதற்கு, நகரத்தில் வேறு இடம் வழங்கப்படவேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்படுகிறது. இதன் முதற்கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில், பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மசூதி கட்டுவதற்கு உத்தரபிரதேச மாநில அரசு வழங்கிய இடத்தில் மே மாதம் கட்டுமான பணியை தொடங்கவிருப்பதாக அயோத்தி மசூதி மேம்பாட்டு கமிட்டி தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக கமிட்டியின் தலைவர் ஹாஜி அர்பாத் சேக் கூறுகையில், "புனித ரமலான் மாதத்திற்குப் பிறகு மே மாதத்தில் கட்டுமான பணி தொடங்கும். மசூதி கட்டி முடிப்பதற்கு மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை ஆகும்" என்றார்.

அயோத்தியில் இருந்து சுமார் 25கி. மீ. தொலைவில் தன்னிபூர் என்ற கிராமத்தில் புதிய மசூதி கட்டப்படுகிறது.


Next Story