வீடுகளில் நாய் வளர்ப்போருக்கு புதிய விதிமுறைகள்; பெங்களூரு மாநகராட்சி முடிவு


வீடுகளில் நாய் வளர்ப்போருக்கு புதிய விதிமுறைகள்; பெங்களூரு மாநகராட்சி முடிவு
x

வீடுகளில் நாய் வளர்ப்போருக்கு புதிய விதிமுறைகளை விதிக்க பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுஒரு புறம் இருக்க வீடுகளில் நாய்களை செல்லப்பிராணியாக வளர்ப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களால் அண்டை வீட்டாருடன் தகராறு, மோதல், கொலை சம்பவங்களும் நடந்துள்ளது. மேலும் சிலர் நாய்களை வளர்த்து இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்தும் வருகிறார்கள். இந்த நிலையில் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம், நாய் வளர்ப்போருக்கு புதிய விதிமுறைகளை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.

அதாவது நாய்களை வளர்க்கவும், விற்பனை செய்யவும் உரிமம் கட்டாயம், வீடு மற்றும் விற்பனை மையங்களில் நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி போடுவது கட்டாயம், வீட்டில் ஒரு நாய் மட்டுமே வளர்க்க வேண்டும், தெருவில் நாய்களை கட்டிப்போட்டு வளர்க்க கூடாது, ஒவ்வொரு மாதமும் நாய் பாதுகாப்புக்காக தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல புதிய விதிமுறைகளை மாநகராட்சி வகுத்துள்ளது. இந்த புதிய விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்கும்படி மாநகராட்சி, கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அரசு ஒப்புதல் வழங்கியதும் இந்த புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும்.


Next Story