நிமோனியாவால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை குணமாக சூடு வைத்த கொடூரம்


நிமோனியாவால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை குணமாக சூடு வைத்த கொடூரம்
x

கோப்புப்படம் 

இரும்பு கம்பியால் சூடு வைத்தால் காய்ச்சல் குணமாகிவிடும் என்ற மூடநம்பிக்கையால் குழந்தையின் குடும்பத்தினர் குழந்தையின் வயிற்றில் சூடு வைத்துள்ளனர்.

உஜ்ஜயினி,

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை குணமாக வேண்டும் என்று வயிற்றில் இரும்புக் கம்பியால் சூடு போடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து உஜ்ஜயினியில் உள்ள மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு மருத்துவர் ஒருவர் கூறும்போது, 'மஹித்பூருக்கு அருகில் உள்ள கிராமத்தில் இருந்து கடும் காய்ச்சலாலும், சளியாலும் பாதிக்கப்பட்ட பிறந்து ஒரு மாதமேயான குழந்தை அழைத்து வரப்பட்டது. குழந்தையின் வயிற்றில் சூடு வைக்கப்பட்ட தழும்புகள் இருந்தன.

அதுகுறித்து கேட்டபோது, இரும்பு கம்பியால் சூடு வைத்தால் காய்ச்சல் குணமாகிவிடும் என்ற மூடநம்பிக்கையால் குழந்தையின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் குழந்தையின் வயிற்றில் சூடு வைத்தது தெரிய வந்தது' என்று கூறினார். மேலும் அவர், 'மக்கள் மூடநம்பிக்கைகளை விட்டொழிய வேண்டும். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, இதனால் குழந்தைகள் பாதிக்கப்படாமல் காப்பாற்ற வேண்டும்' என்று கூறினார்.


Next Story