காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் காந்தி குடும்பத்தின் பினாமி ஆக மட்டுமே இருப்பார் - பாஜக கடும் தாக்கு


காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் காந்தி குடும்பத்தின் பினாமி ஆக மட்டுமே இருப்பார் - பாஜக கடும் தாக்கு
x

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யாராக இருந்தாலும், ராகுல் காந்திக்கு கட்சியில் முக்கிய இடம் கிடைக்கும்.

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசிதரூர், திக் விஜயசிங், அசோக் கெலாட் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, ராஜஸ்தான் முதல்-மந்திரியாக உள்ள அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்வானால், அம்மாநிலத்தின் அடுத்த முதல்-மந்திரி யார்? என்பதை காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஜய் மேகன் மற்றும் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பார்கள் என்ற செய்தி வெளியானது.

இந்த நிலையில், இது குறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேஜாத் பூனவல்லா கூறுகையில்:-

கட்சியின் முன்னாள் தலைவராக மாறிய பின், சோனியா காந்திக்கு என்ன தகுதி இருக்கும்? காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இது குறித்து முடிவு செய்ய வேண்டாமா? காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் காந்தி குடும்பத்தினரின் ரிமோட் கண்ட்ரோலில் இருப்பார்.

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் ஆக வருபவர், காந்தி குடும்பத்தின் "பினாமி"யாகவே இருப்பார். அடுத்த தலைவர் யாராக இருந்தாலும், ராகுல் காந்திக்கு கட்சியில் முக்கிய இடம் கிடைக்கும் என்று ப.சிதம்பரம் கூறி உள்ளார்.

ஆகவே முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போல புதிய காங்கிரஸ் தலைவர் ரிமோட் மூலம் காந்தி குடும்பத்தால் கட்டுப்படுத்தப்படுவார். அதற்கு ப.சிதம்பரம் கூறிய இந்த அறிக்கை ஒரு சான்றாக இருக்கிறது.

தற்போது நடைபெற்று வரும் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் என்பது கண்துடைப்பே தவிர வேறில்லை என்பதை இந்த அறிக்கைகள் தெளிவுபடுத்தியுள்ளன.

இவ்வாறு பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேஜாத் பூனவல்லா கூறினார்.


Next Story