நெய்வேலி என்ஜினீயர் பணி நியமன விவகாரம்: மத்திய மந்திரியுடன் டி.ஆர்.பாலு ஆலோசனை
நெய்வேலி என்ஜினீயர் பணி நியமன விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரியுடன் டி.ஆர்.பாலு ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி,
நெய்வேலியில் உள்ள பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 299 என்ஜினீயர் பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் ஒரு தமிழர் கூட இல்லை. இந்த விவகாரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு மத்திய அரசின் கவனத்துக்கு இதனை கொண்டு சென்றார்.
இதன் அடிப்படையில் நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் நிலக்கரி-சுரங்கத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராகேஷ்குமார் ஆகியோருடன் டி.ஆர்.பாலு பங்கேற்கும் நேரடி ஆலோசனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்படி இந்த ஆலோசனை டெல்லியில் நேற்று நடைபெற்றது. அப்போது டி.ஆர்.பாலு முதல்-அமைச்சரின் கருத்துகளை முன் வைத்தார். மந்திரியும், அதிகாரிகளும் அதற்கான விளக்கங்களை அளித்தனர்.
Related Tags :
Next Story