நிபா வைரஸ்: ட்ரூனாட் சோதனை நடத்த ஐ.சி.எம்.ஆர். அனுமதி - கேரள மந்திரி தகவல்

நிபா வைரஸ்: ட்ரூனாட் சோதனை நடத்த ஐ.சி.எம்.ஆர். அனுமதி - கேரள மந்திரி தகவல்
x

கோப்புப்படம் 

நிபா வைரஸ் பாதிப்பை கண்டறிய ட்ரூனாட் சோதனை நடத்த ஐ.சி.எம்.ஆர். ஒப்புதல் அளித்துள்ளதாக கேரள மந்திரி வீணா ஜார்ஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

நிபா வைரஸ் பாதிப்பை கண்டறிய ட்ரூனாட் சோதனை நடத்த ஐ.சி.எம்.ஆர். ஒப்புதல் அளித்துள்ளதாக கேரள மந்திரி வீணா ஜார்ஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

கேரளாவை அச்சுறுத்திவரும் நிபா வைரஸ் பாதிப்பு குறித்து பேசிய அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், கடந்த 4 நாட்களில் யாருக்கும் புதிதாக பாதிப்பு ஏற்படவில்லை என்றார். இதுவரை 323 மாதிரிகளை பரிசோதனை செய்ததில், 317 பேருக்கு பாதிப்பு இல்லையென முடிவுகள் வந்துள்ளதாகவும், 36 வவ்வால் மாதிரிகளை சோதனை செய்ததிலும் பாதிப்பு இல்லையென்று முடிவுகள் வந்துள்ளதாக தெரிவித்தார்.

இதனிடையே, நிபா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் உட்பட 4 பேரின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்த அவர், ட்ரூனாட் சோதனை நடத்த ஐ.சி.எம்.ஆர். அனுமதி அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Next Story