உலக அளவில் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன் உள்பட 4 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்..!


உலக அளவில் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன் உள்பட 4 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்..!
x

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்கள் கொண்ட பட்டியலை ஆண்டுதோறும் அமெரிக்காவின் போர்ப்ஸ் இதழ் வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலானது செல்வம், ஊடகம், தாக்கம் மற்றும் செல்வாக்கு ஆகிய 4 துறைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. அதில் உலக அளவில் மிகவும் சக்திவாய்ந்த பெண்ணாக ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் முதலிடத்தை பிடித்து உள்ளார். ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் கிறிஸ்டின் லகார்ட் 2-ம் இடத்தையும், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இந்த பட்டியலில் இந்தியாவின் சார்பில் 4 பேர் இடம்பெற்றுள்ளனர். அதில்,மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் 32-வது இடம் பிடித்துள்ளார். தொடர்ந்து 4 ஆண்டுகளாக இந்தப் பட்டியலில் இடம்பிடித்து வரும் அவர் 5-வது முறையாக இந்த ஆண்டும் தனது இடத்தை உறுதி செய்திருக்கிறார்.

இதை தொடர்ந்து எச்.சி.எல்.டெக் தலைவர் ரோஷிணி நாடார் மல்கோத்ரா 60-வது இடத்தையும், இந்திய ஸ்டீல் ஆணைய தலைவர் சோமா மண்டல் 70-வது இடத்தையும், பயோகான் நிறுவனர் கிரண் மஜூம்தார் 76-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இதில் ரோஷினி நாடார் மல்கோத்ரா, சோமா மண்டல், கிரண் மஜூம்தார் ஷா ஆகியோர் கடந்த ஆண்டு பட்டியலிலும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story