ஹெர் சர்க்கிள் எவ்ரிபடி- புதிய திட்டத்தை தொடங்கிய நீடா அம்பானி


உடலை பற்றிய நேர்மறையான எண்ணங்களை ஏற்று கொண்டு மற்றும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய இயக்கம் ஒன்றை நாடு தழுவிய அளவில் செயல்படுத்துவதற்காக, ஹெர் சர்க்கிள் எவ்ரிபடி என்ற திட்டத்தினை நீடா அம்பானி தொடங்கி உள்ளார்.

பெண்களுக்காக, இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த டிஜிட்டல் விசயங்களை அடக்கிய மற்றும் நெட்வொர்க்கிங் தளம் கொண்ட, ஹெர் சர்க்கிள் என்ற அனைத்து விசயங்களையும் உள்ளடக்கி தொடங்கப்பட்ட ஒரு திட்டம், 2-வது ஆண்டு நிறைவில் 31 கோடி பேரை கொண்டுள்ளது என்பதற்காக கொண்டாட்டத்தில் ஈடுபடுகிறது.

ரிலையன்ஸ் பவுண்டேசன் அமைப்பின் நிறுவன தலைவரான திருமதி நீடா அம்பானி அவர்கள் இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தில், ஹெர் சர்க்கிள் எவ்ரிபடி என்ற திட்டத்தினை தொடங்கி உள்ளார்.

உடலை பற்றிய நேர்மறையான எண்ணங்களை கொண்டாடவும் மற்றும் அளவு, வயது, வண்ணம், மதம், நரம்பியல் பன்முக தன்மை அல்லது உடல்நிலை ஆகியவற்றை கணக்கில் கொள்ளாமல் எல்லாவற்றையும் ஏற்று கொண்டு ஊக்கப்படுத்தும் வகையிலான திட்டம் இது ஆகும். இந்த இயக்கம், இரக்கம் மற்றும் தீர்ப்புகளல்லாத ஏற்று கொள்ளலை கொண்ட வட்டம் ஒன்றை உருவாக்கும் நோக்கம் கொண்டது.

ஹெர் சர்க்கிள் திட்டம், பெண்களுக்கு ஒரு பாதுகாப்பான, எல்லாவற்றையும் உள்ளடக்கிய, வளர்ச்சி நிலை சார்ந்த டிஜிட்டல் புகலிடம் அளிப்பதற்காக 2021-ம் ஆண்டு திருமதி அம்பானியால் தோற்றுவிக்கப்பட்டு, தொடங்கி வைக்கப்பட்டது.

அதன் 2-வது ஆண்டு தினத்தில், இந்த தளம் ஆனது ஒட்டு மொத்த அளவில் 31 கோடி பேரை தனித்துவமுடன் சென்றடைந்த பெண்களுக்கான இந்தியாவின் பெரிய டிஜிட்டல் தளம் ஆக உருமாறி உள்ளது. அனைத்து விசயங்களையும் உள்ளடக்கிய என்ற முதன்மையான கருத்துருவை இயக்குவதுடன், திருமதி அம்பானி ஒவ்வொரு தனி நபரையும் முன்னே வரும்படி அழைப்பு விடுப்பதுடன், இந்த திட்ட தொடக்கத்தின் ஒரு பகுதியாக இருந்து, முக்கியத்துவம் வாய்ந்த தாக்கம் ஏற்படுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கிறார்.

ஹெர் சர்க்கிள் எவ்ரிபடி என்ற திட்ட தொடக்க நிகழ்ச்சியில் திருமதி நீடா அம்பானி பேசும்போது, ஹெர் சர்க்கிள் திட்டம் சகோதரத்துவம் பற்றியது. ஆனால், அதனுடன் ஒற்றுமையையும் உள்ளடக்கியது. சமத்துவம், அனைத்தும் உள்ளடங்கிய மற்றும் அனைவருக்கும் மதிப்பு என்ற அடிப்படையில் அமைந்தது அந்த ஒற்றுமை. அதுவே நம்முடைய ஹெர் சர்க்கிள் எவ்ரிபடி என்ற புதிய திட்டத்தின் மைய விசயமும் ஆகும். சமூக ஊடகத்தில் நடக்க கூடிய கிண்டல்களின் தன்மையை நாம் அனைவரும் காண்கிறோம். மக்கள் எதிர்கொண்டு வரும் போராட்டங்களை பற்றி அறியாமலேயே அவர்களை பற்றிய கருத்துகளை பதிவிடுகின்றனர். மருத்துவ பிரச்சனைகள் உள்ளன. மரபுரீதியான காரணிகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். எனினும், கிண்டலுக்கும், கேலிக்கும் அவர்கள் ஆளாகின்றனர். அது அதிக பாதிப்பை, குறிப்பிடும்படியாக இளைஞர்களின் மனங்களில் உண்டாக்குகிறது. எங்களுடைய இந்த திட்ட தொடக்கம் ஆனது இந்த விசயங்களை சில வழிகளில் தீர்க்கும் என நான் நம்புகிறேன். அத்துடன், மக்கள் அவர்களாக இருப்பதற்கான நம்பிக்கை மற்றும் சுதந்திரம் ஆகியவற்றையும் வழங்கும் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்ததுடன், ஹெர் சர்க்கிளின் சிறப்பம்சங்களை கொண்ட வருடாந்திர சிறப்பு டிஜிட்டல் வடிவிலான புத்தகம் வெளியிட்டு, சிறப்பு பேட்டி ஒன்றையும் வழங்கி 2-வது ஆண்டு தின கொண்டாட்டத்தில் அவர் ஈடுபட்டார்.

ஹெர் சர்க்கிள் பயனாளர்களை ஒரு சிறப்பு செய்தியை கொண்டு திருமதி நீடா அம்பானி வாழ்த்தி உள்ளார்.

ஹெர் சர்க்கிளின் ஒட்டு மொத்த குழுவினருக்கும் மற்றும் அதனை உருவாக்கிய லட்சக்கணக்கான மகளிருக்கும் வாழ்த்துகள்! ஒரு திட்டத்தின் அடிப்படையில் இதனை தொடங்கினோம். அனைத்து மகளிருக்கான ஓரியக்கம் ஆக இதனை உருவாக்குவோம் என்ற நம்பிக்கை உள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில், ஊரடங்கு அமலில் இருந்தபோது ஹெர் சர்க்கிளை தொடங்கினோம். கடந்த 2 ஆண்டுகளில் நீண்ட பாதையை நாம் கடந்து வந்து உள்ளோம். ஆனால் இது ஒரு தொடக்கமே! என கூறியுள்ளார்.

ஹெர் சர்க்கிளின் 2-வது ஆண்டு மைல்கல்லானது, டிஜிட்டல் பயன்பாடு மற்றும் நெட்வொர்க்கிங் ஆகிய இலக்குகளை உள்ளடக்கியது. அதில் 2.2 லட்சத்திற்கும் கூடுதலான பதிவு பெற்ற பெண் பயனாளர்களை கொண்டிருக்கிறோம். அவர்களில் பலர் தொழில் முனைவோர்களாக உள்ளனர். தொழில் மற்றும் சமூகரீதியாக ஒன்றிணைந்து செயல்பட்டு ஒன்றாக வளர்ச்சி அடைய, சீராக அவர்களை நாங்கள் ஊக்குவித்து வருகிறோம்.

ஹெர் சர்க்கிள் எவ்ரிபடி திட்டம் ஓராண்டு கால நிகழ்ச்சியாக இருக்கும். உண்மை வாழ்க்கை கதைகள் மற்றும் குறும்படங்களின் வழியாக பெண்கள் தங்களது வெவ்வேறு உடல் அளவுகள் மற்றும் தோற்றங்களை, சமூக ஊடக உலகில் ஊக்கப்படுத்தும் நோக்கங்களை ஹெர் சைக்கிள் திட்டம் கொண்டு உள்ளது.

நீங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு, நிறம் மற்றும் வடிவத்துடன் இருக்க வேண்டும் என்ற உண்மையல்லாத அழகு தரநிலைகள் மற்றும் நச்சு நிறைந்த விதிமுறைகள் ஆகிய சவால்களை எதிர்கொண்டு, அவற்றை வெற்றியாக மாற்றியும், தங்களது தனித்துவங்களை தழுவியும் மற்றும் டிஜிட்டல் வெளியில் மாற்றம் மற்றும் செல்வாக்கு செலுத்தும் பெண்களாக இருப்பவர்களை ஊக்குவிக்கும் நோக்கங்களையும் கொண்டது.

உடலை பற்றிய நேர்மறையான எண்ணங்களை கொண்ட ஓருலகம் பற்றிய எங்களது நிறுவனர் திருமதி நீடா அம்பானியின் தொலைநோக்கு பார்வையை முன்னெடுத்து செல்லும் பணியில், ஹெர் சர்க்கிள் திட்டம் ஆனது, பெண்கள் முதலில் தங்களை முன்னிறுத்தி, பின்னர் இரக்கம் மற்றும் உடல்தகுதி சார்ந்த ஒரு பெரிய வட்டம் கட்டமைக்கப்படுவதனை ஊக்கப்படுத்தும்.

ஹெர் சர்க்கிள் எப்படி செயல்படுகிறது?

திருமதி நீடா அம்பானியால் தோற்றுவிக்கப்பட்ட ஹெர் சர்க்கிள் திட்டம், பெண்களை ஒரு சமூக தளத்தின் வழியே ஒருவருடன் ஒருவரை இணைப்பதுடன், பெண்கள் தொடர்பான ஈர்க்க கூடிய விசயங்கள் மற்றும் முன்னேற்றம் சார்ந்த விசயங்களையும் வழங்கி அவர்களை ஓரிடத்தில் நிறுத்தும் இலக்குடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இதன்படி பெண்ணானவள் துடிப்பான வீடியோக்களை பார்க்கிறாள். வாழ்தல், நலத்துடன் இருத்தல், நிதி, பணி, ஆளுமை திறன் வளர்ச்சி, சமூக சேவை, அழகு, நாகரீகம், பொழுதுபோக்கு, ஆக்கப்பூர்வ சுய வெளிப்பாடு மற்றும் மகளிர் தலைமையிலான என்.ஜி.ஓ.க்கள் (அரசு சாரா அமைப்புகள்) மற்றும் பிற அமைப்புகளின் வழியே பொது வாழ்வில் துடிப்புடன் பங்காற்றுதல் என தீர்வு சார்ந்த வாழ்க்கை செயல்திட்டங்களை உள்ளடக்கிய கட்டுரைகளை படிப்பதில் அவள் ஈடுபட முடியும்.

பயனாளர்கள் தங்களது விருப்ப மொழிக்கிடையே மாறி கொள்ள முடியும். தற்போது ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளன. அதில் ஒரு மொழியை எளிதில் தேர்ந்தெடுக்கும் அம்சம் உள்ளது. இந்தி உள்ளடக்கம் ஆனது தனித்துவம் மற்றும் அசல் வடிவில், பயனாளருக்காக வடிவமைக்கப்பட்டது.

இந்த தளம் ஆனது, சுகாதாரம், நல்வாழ்வு, கல்வி, தொழில்முனைதல், நிதி, உதவி செய்யும் வழக்கம், வழிகாட்டுதல் மற்றும் வழிநடத்துதல் ஆகியவற்றில் நிபுணர்களாக உள்ள ரிலையன்சின் மதிப்பிற்குரிய குழுவினரிடம் இருந்து பெறப்பட்ட பதில்களை பெண்களுக்கு வழங்குகிறது.

கூடுதல் திறன்கள் மற்றும் வேலைகள் பிரிவானது, புதிய தொழில்முறை சார்ந்த திறன்களை கண்டறிய உதவுவதுடன், தனது சுயவிவரத்திற்கு பொருந்த கூடிய வேலை வாய்ப்புகளை பெறவும் உதவும்.

வர்த்தகத்தில் சிறந்தவர்களிடம் இருந்து நிபுணத்துவம் வாய்ந்த வகுப்புகள் வழியே அவள் கற்று தேர்ச்சி அடையலாம். அல்லது இலவச டிஜிட்டல் படிப்புகளையும் பெறலாம்.

அந்தரங்க, தனிப்பட்ட, பாதுகாப்பான:

வீடியோக்கள் முதல் கட்டுரைகள் வரையிலான விசயங்கள் அனைவருக்கும் பொதுவானது என்ற போதிலும், சமூக நெட்வொர்க்கிங் பகுதிக்கான தளம் பெண்களுக்கு மட்டுமே உரியது. அந்த சமூக தொடர்பானது அவளுக்கு பாதுகாப்பான, பெண்கள் மட்டுமே நிறைந்த அமைப்பை வழங்குவதுடன், நலன்களை பகிர்ந்து புதிய நண்பர்களை உருவாக்கவும் அல்லது தயக்கமின்றி சம வயதுள்ளோரிடம் கேள்விகளை கேட்கவும் முடியும்.

ஒரு நம்பிக்கையான கலந்துரையாடலுக்கான அறையில் மருத்துவம் மற்றும் நிதி சார்ந்த நிபுணர்களிடம் கேள்விகளை கேட்பதற்கான ஒரு தனித்துவ மற்றும் தனிப்பட்ட பொதுவெளியும் ஹெர் சர்க்கிளில் உள்ளது.

ஹெர் குட் ஹேபிட் செயலி:

பயனுள்ள மற்றும் மேம்படுத்தும் விசயங்களை வழங்குதல், சமூக நெட்வொர்க்கிங் மற்றும் ஒரு பாதுகாப்பான மற்றும் தனிப்பட்ட சூழலில் நிபுணர்களின் அறிவுரைகளை வழங்குதல் உள்ளிட்டவற்றுடன், உடல்தகுதி, மாதவிடாய் கண்காணிப்பு, கருவுறுதல் மற்றும் கர்ப்ப வழிகாட்டி மற்றும் நிதி கண்காணிப்பு ஆகியவற்றில் சரியான பழக்க வழக்கங்களை பெறவும் மற்றும் நீடித்திருக்கவும் தேவையான வழித்தடங்களையும் ஹெர் சர்க்கிள் வழங்குகிறது.

ஹெர் சர்க்கிள், கணினி மற்றும் மொபைல் வழியே வலைதளத்தில் தேடினால் கிடைக்க கூடியது என்பதுடன் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஐ.ஓ.எஸ். ஆப் ஸ்டோரில் கிடைக்க கூடிய இலவச செயலியாகும்.

இறுதியாக, பதிவு செய்த பயனாளர்களுக்கு ஹெர் சர்க்கிளில் பங்கேற்பது என்பது முற்றிலும் இலவசம் ஆகும்.


Next Story