நிதிஷ் குமார் மீது பிரசாந்த் கிஷோர் மீண்டும் தாக்கு..!!


நிதிஷ் குமார் மீது பிரசாந்த் கிஷோர் மீண்டும் தாக்கு..!!
x

கோப்புப்படம்

சாலை சீரமைக்காத விவகாரம் தொடர்பாக நிதிஷ் குமார் மீது பிரசாந்த் கிஷோர் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.

பாட்னா,

பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார். இதற்காக பீகாரில் அவர் 3,500 கி.மீ. பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

இந்த பாதயாத்திரையின்போது மாநில முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ் குமார் மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். மேற்கு சம்பாரான் மாவட்டத்தில் பயணம் மேற்கொண்டு வரும் அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடி வருகிறார்.

அப்போது அங்குள்ள சாைல ஒன்று மோசமாக கிடப்பதை குறித்து முதல்-மந்திரியை மீண்டும் குற்றம் சாட்டினார். அவர் கூறுகையில், 'பெட்டியா நகரம் 32 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குள்ள அழுக்கான சாலை ஆஸ்துமாவை உருவாக்கி விடுமோ என பயணிகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது' என்றார்.

ேமலும் அவர், '15 ஆண்டுகளுக்கு முன் இங்குள்ள ஒருவர் முதல்-மந்திரி மீது 'ஷூ' வீசியதால் சாலை சீரமைக்கப்படவில்லை என தெரிகிறது. அந்த நபர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அதற்காக ஒட்டுமொத்த பகுதியும் தண்டிக்கப்படுகிறது' என குற்றம் சாட்டினார்.

ஆனால் பிரசாந்த் கிஷோரின் இந்த குற்றச்சாட்டை ஐக்கிய ஜனதாதளம் நிராகரித்து உள்ளது.


Next Story