பீகாரில் கூட்டணி மாற்றமா? - நிதிஷ் குமார் பதில்


பீகாரில் கூட்டணி மாற்றமா? - நிதிஷ் குமார் பதில்
x

கோப்புப்படம்

பீகாரில் கூட்டணி மாற்றம் வருமா என்ற கேள்விக்கு முதல்-மந்திரி நிதிஷ் குமார் பதில் அளித்தார்.

பாட்னா,

பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், பாட்னாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் நிருபர் கள் எழுப்பிய கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- வேலைக்கு நிலம் பெற்றதாகக்கூறப்படுகிற ஊழலில், பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் மற்றும் குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் மத்திய அமலாக்கத்துறை சோதனைகளை நடத்தி உள்ளதே?

பதில்:- இதுபற்றி சோதனைகளுக்கு ஆளானவர்கள்தான் பதில் தெரிவிக்க முடியும்.

ஆனால் நாங்கள் எப்போதெல்லாம் ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சியுடன் கூட்டணி அமைக்கிறோமோ அப்போதெல்லாம் இப்படி சோதனைகளை நடத்துகிறார்கள். இது பற்றி அவர்கள்தான் விளக்க வேண்டும்.

எதிர்க்கட்சிகள் கடிதத்தில்...

கேள்வி:-மத்திய புலனாய்வு அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதுபற்றி பிரதமர் மோடிக்கு 9 எதிர்க்கட்சித்தலைவர்கள் எழுதிய கடிதத்தில் நீங்கள் ஏன் கையெழுத்து போடவில்லை?

பதில்:- அரசியல் கட்சிகள் தனித்தனியாக இயங்குகின்றன. நான் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டிருந்த நிர்வாக செயல்பாடுகளைக் கவனித்துக்கொண்டிருந்தேன். ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து, தேவைப்படுகிறபோது நான் இடங்களைப் பார்வையிட செல்வேன்.

கேள்வி:- துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவுகுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளதே?

பதில்:- இதில் புதிதாக ஒன்றும் இல்லை.

கூட்டணியில் மாற்றமா?

கேள்வி:- பீகாரில் கூட்டணியில் ஏதேனும் மாற்றம் வருமா?

பதில்:- இல்லை. மெகாகூட்டணி பற்றி கவலைப்பட தேவை இல்லை என்று அவர் பதில் அளித்தார்.


Next Story