லாலுவை போல நிதிஷ் குமாரும் விரைவில் சிறைக்கு செல்வார்: பாஜக பாய்ச்சல்


லாலுவை போல  நிதிஷ் குமாரும் விரைவில் சிறைக்கு செல்வார்: பாஜக பாய்ச்சல்
x

லாலு பிரசாத் யாதவை போல நிதிஷ்குமாரும் விரைவில் சிறைக்கு செல்வார் என்று பாஜக விமர்சித்துள்ளது.

பாட்னா,

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய கையோடு, ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். பீகார் அரசியலில் யாரும் எதிர்பாராத வகையில் நடைபெற்ற இந்த அரசியல் ஆட்டம் பாஜகவுக்கு அதிர்ச்சி அளித்தது. கூட்டணி முறிந்ததால், பாஜக- ஐக்கிய ஜனதா தளம் கட்சி இடையே தொடர்ந்து வார்த்தை யுத்தம் நடைபெற்று வருகிறது. ஒருபக்கம் 2024- மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிரான அணியை ஒருங்கிணைப்பதில் நிதிஷ்குமார் ஆர்வம் காட்டி வருவது பாஜக கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், நிதிஷ்குமாரை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. பதிலுக்கு ஜேடியூ கட்சியும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், பீகார் அரசியல் களம் அனல் பறக்கிறது. இந்த நிலையில், லாலு பிரசாத் யாதவை போல நிதிஷ்குமாரும் சிறைக்கு செல்வார் என்று பாஜக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக பீகார் மாநில பாஜக தலைவர் விஜய் குமார் சின்கா கூறுகையில், " ''ஊழல் இல்லா நாடாக இந்தியாவை மாற்ற பிரதமர் நரேந்திர மோடி உறுதி பூண்டுள்ளார். மக்களும் லஞ்சம் இல்லாத இந்தியாவை மாற்ற அர்ப்பணிப்புடன் உள்ளனர். எனவே, நிதிஷ் குமார் இதுவரை செய்த பாவங்களை துறந்து விட்டு திருந்த வேண்டும். இல்லையென்றால் அவரது அண்ணன்( லாலு பிரசாத் யாதவ்) சென்ற சிறைச்சாலைக்கே நிதிஷ் குமாரும் செல்வார்கள்" என்றார்.


Next Story