உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி வேண்டாம் - ஷிண்டே அணி மந்திரி வலியுறுத்தல்
உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி வேண்டாம் என்று ஷிண்டே அணி மந்திரி வலியுறுத்தினார்.
மும்பை,
அவுரங்காபாத்தில் உள்ள சில்லோட் தொகுதி எம்.எல்.ஏ. அப்துல் சாத்தர். ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்த இவர் மாநில மந்திரியாக உள்ளார். இவர் சில்லோட் தொகுதியில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல்களில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க விருப்பமில்லை என கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
" நான் எனது சில்லோட் தொகுதி மட்டும் பற்றி தான் பேசுகிறேன். எங்களுக்குள் எந்த குழப்பமும் ஏற்பட்டுவிட கூடாது. எனவே கிராமபஞ்சாயத்து, ஜில்லா பரிஷத், நகர் பாலிகா போன்ற உள்ளாட்சி தேர்தல்களில் பா.ஜனதாவுக்கு எதிராக போட்டியிடுவது நல்லது.
எனது இந்த நிலைப்பாட்டை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவிடம் கூறியுள்ளேன். இதுகுறித்து அவர் இறுதி முடிவு எடுப்பார் " என்றார்.
Related Tags :
Next Story