மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: கட்சிகளின் பலம் என்ன?
நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் இன்று பதில் அளிக்கிறார்.
புதுடெல்லி,
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் இன்று பதில் அளிப்பார் என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மக்களவையில் அறிவித்தார்.
இந்த சூழலில், எந்த கட்சிக்கு எத்தனை எம்.பி.க்கள் உள்ளனர் என்ற விபரம் பின்வருமாறு உள்ளது.. தேசிய ஜனநாயக கூட்டணியில் மொத்தமுள்ள 331 எம்.பி.க்களில் 303 பேர் பாஜகவினர் ஆவர்.
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு 144 எம்.பி.க்கள் உள்ளனர். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுக்கு 70 எம்.பி.க்கள் உள்ளனர்.
Related Tags :
Next Story