மீண்டும் மோடி ஆட்சிதான்.. சந்தேகமே வேண்டாம்: பா.ஜ.க. கூட்டத்தில் அமித்ஷா பேச்சு


மீண்டும் மோடி ஆட்சிதான்.. சந்தேகமே வேண்டாம்:  பா.ஜ.க. கூட்டத்தில் அமித்ஷா பேச்சு
x

நாட்டில் உள்ள ஏழைகள் குறித்தும் நாட்டின் வளர்ச்சி குறித்தும் பிரதமர் மோடி சிந்திப்பதாக உள்துறை மந்திரி அமித்ஷா பேசினார்.

புதுடெல்லி,

டெல்லியில் பா.ஜ.க. தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தின் இரண்டாம் நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். தேசிய கவுன்சில் கூட்டத்தில் பேசிய அமித்ஷா, வாரிசு அரசியல் குறித்து கடுமையாக விமர்சித்தார். அமித்ஷா பேசியதாவது:-

"அரசியலில் இந்தியா கூட்டணியின் நோக்கம் என்ன? பிரதமர் மோடி சுயசார்பான இந்தியாவை உருவாக்கும் இலக்கில் இருக்கிறார். சோனியா காந்தி தன் மகன் ராகுல் காந்தியை பிரதமராக்குவதிலும் சரத் பவார் தன் மகளை முதல்-மந்திரி ஆக்குவதிலும் குறிக்கோளாக இருக்கிறார்கள்.

மம்தா பானர்ஜி தன் மருமகனையும் உத்தவ் தாக்கரே, மு.க. ஸ்டாலின், லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ் ஆகியோர் தன் மகன்களையும் முதல் மந்திரிகளாக்க தீவிரம் காட்டி வருகிறார்கள். குடும்பத்திற்காக ஆட்சியைப் பிடிக்க நினைப்பவர்கள், என்றாவது ஏழைகளின் நலனைப் பற்றி சிந்திப்பார்களா?" எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

வர உள்ள தேர்தல் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான மகாபாரதப் போர் போன்றது. மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் காங்கிரஸ் தலைமையிலான குடும்ப கட்சிகளுக்கும் இடையேயான போராகும். பிரதமர் மோடி, நாட்டில் உள்ள ஏழைகள் குறித்தும் நாட்டின் வளர்ச்சி குறித்தும் சிந்திக்கிறார். பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியை அமைப்பார். இதில் யாருக்குமே சந்தேகம் வேண்டாம்" என்றார்.


Next Story