ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை- ரிசர்வ் வங்கி கவர்னர்


ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை- ரிசர்வ் வங்கி கவர்னர்
x
தினத்தந்தி 8 Feb 2024 11:00 AM IST (Updated: 8 Feb 2024 1:38 PM IST)
t-max-icont-min-icon

ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன்களுக்கான வட்டி விகிதமாகும்.

புதுடெல்லி,

வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றத்தையும் இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொள்ளவில்லை. வட்டி விகிதம் மாற்றமின்றி 6.50 ஆக தொடர்கிறது. இது பற்றிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று வெளியிட்டார். நடப்பு நிதி ஆண்டில் சில்லறை பணவீக்கம் 5.4 சதவிகிதமாக இருக்கும். வரும் நிதி ஆண்டில் 5.4 சதவிகிதமாக இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் கடந்த ஆண்டு மே மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையேயான கால கட்டத்தில் 250 அடிப்படை புள்ளிகள் உயர்ந்ததால் 6.50 சதவிகிதமாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இன்றி தொடர்கிறது. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமின்றி நீடிப்பது இது 6-வது முறையாகும்.

1 More update

Next Story