டெல்லி அருகே சுவர் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் பலி


டெல்லி அருகே சுவர் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் பலி
x

டெல்லி அருகே சுவர் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் பலியாகினர்.

நொய்டா,

டெல்லி அருகே நொய்டாவில் உள்ள ஒரு குடியிருப்பின் சுற்றுச்சுவர் அருகே கழிவுநீர் கால்வாயில் நேற்று தொழிலாளர்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென சுற்றுச்சுவர் இடிந்து அவர்கள் மீது விழுந்தது. அதில் 12 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

உடனடியாக பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு இடிபாடுகள் அகற்றப்பட்டன. அங்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் இந்த விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்துவிட்டனர். மற்ற 8 பேரும் காயமைடந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

சுவர் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக போலீஸ், மாவட்ட நிர்வாகம் மற்றும் நொய்டா ஆணையத்தால் விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்த தொழிலாளர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


Next Story