இன்ஸ்டாகிராமில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக பதிவிட்ட இளைஞர் - விரைந்து சென்று காப்பாற்றிய போலீசார்..!


இன்ஸ்டாகிராமில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக பதிவிட்ட இளைஞர் - விரைந்து சென்று காப்பாற்றிய போலீசார்..!
x

கோப்புப்படம்

இன்ஸ்டாகிராமில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக பதிவிட்ட இளைஞரை விரைந்து சென்ற போலீசார் காப்பாற்றினர்.

நொய்டா,

இன்ஸ்டாகிராமில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக பதிவிட்ட 20 வயது இளைஞரை போலீசார் விரைந்து சென்று காப்பாற்றினர்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கயிற்றின் புகைப்படத்தை வெளியிட்டு, "இன்று நான் என்னை முடித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டார். இதையடுத்து இந்த பதிவு உடனடியாக லக்னோவில் உள்ள டிஜிபி தலைமையகத்தின் ஊடகப் பிரிவுக்கு இன்ஸ்டாகிராம் நெட்வொர்க் மூலம் அனுப்பப்பட்டது.

அந்த இளைஞர் கவுதம் புத் நகர் மாவட்டம் தன்கவுரில் உள்ள சந்திரவலி கிராமத்தைச் சேர்ந்த அமித் குமார் என்று அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து நொய்டா மீடியா போலீசார் அவரது வீட்டுக்குச் சென்றனர். பின்னர் அமித் குமாரின் குடும்பத்தினருக்கு தகவல் அளித்து அவருக்கு ஆலோசனை வழங்கினர். தற்போது அவர் நலமாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

விசாரணையில், நேற்று இரவு மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்ததாகவும் அமித் குமார் தெரிவித்தார்.


Next Story