குமாரசாமியை கண்டு நாங்கள் யாரும் பயப்படவில்லை-மந்திரி தினேஷ் குண்டுராவ் பேட்டி
குமாரசாமியை கண்டு நாங்கள் யாரும் பயப்படவில்லை என்று மந்திரி தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:-
சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு அமைந்தது முதல் குமாரசாமிக்கு தூக்கம், நிம்மதி போய்விட்டது. தோ்தல் தோல்வியால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ள அவர் காங்கிரஸ் அரசு மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறுகிறார். குற்றம்சாட்டினால் அதை நிரூபிக்க வேண்டும். அதை விடுத்து பொய் குற்றச்சாட்டுகளை கூறுவது ஏன்?.
ஒரு முறை 'பென் டிரைவ்'-ஐ காட்டினார். இன்னொரு முறை சி.டி. காட்டுகிறார். உண்மையிலேயே அவரிடம் ஆதாரங்கள் இருந்தால் அதை வெளியிட வேண்டும். குமாரசாமியின் கைகளை நாங்கள் யாரும் கட்டவில்லை. குமாரசாமியை கண்டு நாங்கள் யாரும் பயப்படவில்லை. சட்டசபை தேர்தலுக்கு முன்பு 'கிங் மேக்கர்' ஆக வேண்டும் என்று கனவு கண்டார். ஆனால் அவரது கனவை மக்கள் சிதைத்துவிட்டனர். இதனால் காங்கிரஸ் மீது அவர் கோபம் கொண்டுள்ளார். வாய்க்கு வந்தபடி பொய் குற்றச்சாட்டுகளை குமாரசாமி கூறி வருகிறார்.
இவ்வாறு தினேஷ் குண்டுராவ் குறிப்பிட்டுள்ளார்.