வடமாநில கனமழை: "அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ளவோம்"- ராகுல் காந்தி டுவீட்


வடமாநில கனமழை: அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ளவோம்- ராகுல் காந்தி டுவீட்
x

அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும் மீட்புப்பணிக்கு உதவவேண்டுமென ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்துவரும் தொடர் மழையால், கங்கை உள்ளிட்ட முக்கிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் எங்கு பார்த்தாலும் வெள்ளாகாடாக காட்சி அளிக்கின்றன. ஜம்மு காஷ்மீரும் மழையால் பல பாதிப்புகளை சந்தித்துள்ளது.

இந்த நிலையில், வடமாநில கனமழை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தன்னுடைய டுவீட்டரில் கூறி இருப்பதாவது; "இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் பிற வட இந்திய மாநிலங்களில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரனமாக பலர் உயிரிழந்த செய்தி வருத்தமளிக்கிறது.

அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும் மீட்புப்பணிக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த இயற்கை பேரிடர் கடினமான சவாலை நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story