பண்டிட் சமூகம் மீது தாக்குதல்: இது திரைப்படம் அல்ல, காஷ்மீரின் உண்மை நிலை' - ராகுல்காந்தி


பண்டிட் சமூகம் மீது தாக்குதல்: இது திரைப்படம் அல்ல, காஷ்மீரின் உண்மை நிலை - ராகுல்காந்தி
x

பண்டிட்டுகள் 18 நாட்களாக தர்ணாவில் ஈடுபடும் நிலையில் பாஜக 8 ஆண்டுகால ஆட்சியை கொண்டாடுவதில் தீவிரம் காட்டிவருகிறது.

ஜம்மு,

காஷ்மீரில் கடந்த 5 மாதங்களில் 15 பாதுகாப்பு வீரர்கள், 18 பொதுமக்கள் கொல்லப்பட்ட நிலையில் பாஜக 8 ஆண்டுகால கொண்டாடுவதில் தீவிரம் காட்டிவருவதாகவும், 'இது திரைப்படம் அல்ல பிரதமரே, காஷ்மீரின் உண்மை நிலை' என ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் பண்டிட்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது தொடர்பாக பல நகரங்களில் பண்டிட்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அங்கு நேற்று (மே 31) பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இச்சம்பவத்துக்கு அரசியல் தலைவா்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி கூறியதாவது:-

காஷ்மீரில் கடந்த 5 மாதங்களில் 15 பாதுகாப்பு படையினர் வீர மரணம் அடைந்துள்ளனர். ஏற்கனவே 18 பொதுமக்கள் கொல்லப்பட்ட நிலையில் நேற்றும் ஒரு ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பண்டிட்டுகள் 18 நாட்களாக தர்ணாவில் ஈடுபடும் நிலையில் பாஜக 8 ஆண்டுகால ஆட்சியை கொண்டாடுவதில் தீவிரம் காட்டிவருகிறது. பிரதமரே, இது திரைப்படம் அல்ல. இன்றைய காஷ்மீரின் உண்மை நிலை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story