காஷ்மீரை சேர்ந்த குலாம் நபி ஆசாத் கட்சித்தலைவர்கள் காங்கிரசில் இணைந்தனர்


காஷ்மீரை சேர்ந்த குலாம் நபி ஆசாத் கட்சித்தலைவர்கள் காங்கிரசில் இணைந்தனர்
x

பல தலைவர்கள் உள்பட 21 பேர் நேற்று டெல்லியில் மல்லிகார்ஜூன கார்கே முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர்.

புதுடெல்லி,

காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமாக இருந்த குலாம் நபி ஆசாத், கடந்த ஆண்டு ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். இதைத்தொடர்ந்து காஷ்மீரை சேர்ந்த ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் அவரது கட்சியில் இணைந்தனர். எனினும் அவர் மீது கொண்ட அதிருப்தியால் மீண்டும் அவர்கள் காங்கிரசை நாடி வருகின்றனர்.

அந்தவகையில் அவரது கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் உள்பட 21 பேர் நேற்று டெல்லியில் மல்லிகார்ஜூன கார்கே முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால், கட்சியின் மாநில பொறுப்பாளர் ரஜனி பாட்டீல் உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தனர்.

இந்த இணைப்பு தொடர்பாக குலாம் நபி ஆசாத்தை காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் சாடியுள்ளார். இதன் மூலம் அவரது பா.ஜனதா சார்பு நிலை வெளிப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.


Next Story