பிப்ரவரி 14-ந்தேதி பசுக்களை கட்டிப்பிடிக்கும் தினத்தை கொண்டாட வேண்டாம் என அறிவிப்பு


பிப்ரவரி 14-ந்தேதி பசுக்களை கட்டிப்பிடிக்கும் தினத்தை கொண்டாட வேண்டாம் என அறிவிப்பு
x

பசுக்களை கட்டிப்பிடிக்கும் தினம் கொண்டாடுவது தொடர்பான அறிவிப்பை திரும்ப பெறுவதாக விலங்குகள் நல வாரியம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ந்தேதி 'காதலர் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் காதலர் தினத்தை கொண்டாடுவது தொடர்பாக சில வலது சாரி அமைப்புகள் தொடர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. காதலர் தினம் கலாச்சார சீர்க்கேடுக்கு வழிவகுப்பதாகவும், அதனை தடை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் நாடு முழுவதும் பிப்ரவரி 14-ந்தேதி பசுக்களை கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாட வேண்டும் என விலங்குகள் நல வாரியம் அண்மையில் அறிவித்தது. மேற்கத்திய கலாச்சாரத்தின் ஆதிக்கத்தால் வேத கலாச்சாரம் அழிந்து வருவதால், நாட்டு மக்கள் இதனை கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த அறிவிப்புக்கு வரவேற்பும், விமர்சனங்கள் எழுந்த நிலையில், இன்று அந்த அறிவிப்பை திரும்ப பெறுவதாக விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story