ஜக்கூர் விமான நிலைய பகுதியில் விதிகளை மீறிய கட்டிடங்களுக்கு நோட்டீசு


ஜக்கூர் விமான நிலைய பகுதியில் விதிகளை மீறிய கட்டிடங்களுக்கு நோட்டீசு
x

ஜக்கூர் விமான நிலைய பகுதியில் விதிகளை மீறிய கட்டிடங்களுக்கு நோட்டீசு அளிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:பெங்களூரு ஹெப்பால் பகுதியில் ஜக்கூர் விமான பயிற்சி பள்ளி உள்ளது. விமான நிலையங்களை சுற்றிலும் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு உயரமான கட்டிடங்களை கட்ட அனுமதி அளிக்க கூடாது என்று சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் விதிமுறைகளில் கூறப்பட்டு உள்ளது. ஆனால் ஜக்கூர் விமான நிலையத்தின் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் சுமார் 8 அடுக்குமாடி கட்டிடங்கள் நிர்ணயிக்கப்பட்ட உயரத்தை விட கூடுதல் உயரத்தில் கட்டப்பட்டுள்ளன. அதாவது அந்த கட்டிடங்களின் உயரம் 45 மீட்டர் உயரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.


ஆனால் அந்த கட்டிடங்கள் 20 மாடிகள் வரை கட்டப்பட்டுள்ளன. அங்கு இந்த விஷயம் தெரியாமல் மக்கள் வீடுகளை வாங்கியுள்ளனர். விதிமுறைகளை மீறியுள்ள அந்த 11 கட்டிடங்களிடம் விளக்கம் கேட்டு பெங்களூரு மாநகராட்சி நோட்டீசு அனுப்பியுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட உயரத்தை தாண்டி கட்டியுள்ள மாடிகளை இடித்து தள்ள மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.


Next Story