பங்குச்சந்தை முறைகேடு வழக்கு; டெல்லி உட்பட 10 முக்கிய நகரங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை!

பங்குச்சந்தை முறைகேடு வழக்கு; டெல்லி உட்பட 10 முக்கிய நகரங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை!
x
தினத்தந்தி 21 May 2022 9:46 AM GMT (Updated: 21 May 2022 9:51 AM GMT)

தேசிய பங்குச்சந்தையில் நடந்த கோ-லொகேஷன் முறைகேடு வழக்கில், சிபிஐ அதிகாரிகள் பல்வேறு நகரங்களில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.

புதுடெல்லி,

தேசிய பங்குச்சந்தையில் நடந்த கோ-லொகேஷன் முறைகேடு வழக்கில், சிபிஐ அதிகாரிகள் பல்வேறு நகரங்களில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.

மும்பை, குஜராத்தின் காந்தி நகர், டெல்லி, நொய்டா, குருகிராம், கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருக்கும் பங்குத் தரகர்கல், அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் இந்த ரெய்டு நடப்பதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கில் தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியும் எம்.டியுமான சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் குழு இயக்க அதிகாரி ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோர் மீது சிபிஐ ஏற்கெனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

என்எஸ்இ அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணா இருந்தபோது, என்எஸ்இ சர்வர்களுக்கு அருகே, சில குறிப்பிட்ட பங்குதரகு நிறுவனங்களின் சர்வர்கள் வைக்கப்பட்டன. இதனால், பங்குவிற்பனை, விலை, பரிமாற்றம் குறித்த தகவல்கள் விரைவாக அந்த தரகு நிறுவனங்களுக்குக் கிடைத்ததால், கோடிக்கணக்கில் லாபம் ஈட்டின.இது தொடர்பான புகார் எழுந்ததையடுத்து, கடந்த 2018ம்ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது.

கோ-லொகேஷன் வழக்கு குறித்து விசாரித்த சிபிஐ, ஆனந்த் சுப்பிரிமணியம், சித்ராவை கைது செய்து விசாரணை நடத்தியது. இருவரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர்.

Next Story