தேசிய அனல்மின் கழகத்தின் மின் உற்பத்தி - முதல் காலாண்டில் 21.7% அதிகரிப்பு


தேசிய அனல்மின் கழகத்தின் மின் உற்பத்தி - முதல் காலாண்டில் 21.7% அதிகரிப்பு
x

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் தேசிய அனல்மின் கழகம் 21.7% அதிகமாக மின் உற்பத்தி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

ஏப்ரல் முதல் ஜூன் 2022 வரையிலான காலாண்டில் 104.4 பில்லியன் யூனிட் அளவிற்கு மின் உற்பத்தி செய்துள்ளதாகவும், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 85.8 பில்லியன் யூனிட் அளவிற்கு மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் தேசிய அனல்மின் கழகம் 21.7 சதவீதத்திற்கும் அதிகமாக மின் உற்பத்தி செய்துள்ளது. அதே சமயம் ஜூன் 2021-ல் மின் உற்பத்தி 26.9 பில்லியன் யூனிட்டாக இருந்த நிலையில், ஜூன் 2022-ல் 34.8 பில்லியன் யூனிட்டாக(29.3%) அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story