"நாட்டில் உள்ள அணு உலைகள் கதிர்வீச்சு, சுனாமி அபாயங்களில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளன" - மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் விளக்கம்


நாட்டில் உள்ள அணு உலைகள் கதிர்வீச்சு, சுனாமி அபாயங்களில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளன - மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் விளக்கம்
x

அணுக்கழிவு வெளியேற்றுதலில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதாக மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று அணு உலைகளின் பாதுகாப்பு தொடர்பாக தி.மு.க. எம்.பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் பதிலளித்தார்.

அப்போது பேசிய அவர், கதிர்வீச்சு மட்டுமல்லாது சுனாமி போன்ற அபாயங்களில் இருந்தும் நம் நாட்டில் உள்ள அனைத்து அணு உலைகளும் பாதுகாக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். தற்போது வரை கதிர்வீச்சு அபாயம் போன்ற எந்த சம்பவமும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், அணுக்கழிவு வெளியேற்றுதலில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதாக தெரிவித்தார்.


Next Story