நிர்வாணமாக பேசிய வீடியோ உண்மையானால்...! நானே என் தலையை துண்டித்துக்கொள்வேன் சவால் விட்ட எம்.பி.


நிர்வாணமாக பேசிய வீடியோ உண்மையானால்...! நானே என்  தலையை துண்டித்துக்கொள்வேன் சவால் விட்ட எம்.பி.
x

தெலுங்கு தேசம் கட்சியினர், மற்றும் எதிர்க்கட்சியினர் கோரண்ட்லா மாதவ் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

திருப்பதி:

ஆந்திரா மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் இந்துபுரம் எம்.பி.யாக இருப்பவர் கோரண்ட்லா மாதவ் (வயது 45). இவர் கடந்த 2019-ம் ஆண்டு வரை போலீஸ் இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்தார். அப்போது தெலுங்கு தேசம் கட்சி அமைச்சராக இருந்த ஜே.சி.பி பிரபாகர் ரெட்டி போலீசார் குறித்து விமர்சனம் செய்து பேசினார்.

அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய கோரண்ட்லா மாதவ், இனி போலீசார் குறித்து விமர்சனம் செய்து பேசினால் போலீசார் உங்களுக்கு பாதுகாப்பு தர முடியாது என பதிலடி கொடுத்தார்.

இதையடுத்து ஜெகன்மோகன் ரெட்டி கோரண்ட்லா மாதவை தன்னுடைய கட்சியில் சேர்த்து எம்.பி. சீட்டு கொடுத்தார். தேர்தலில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்றார். இந்த நிலையில் கடந்த வாரம் கோரண்ட்லா மாதவ் இளம்பெண் ஒருவருக்கு நிர்வாண நிலையில் வீடியோ காலில் போன் செய்து 30 நிமிடம் வந்து சென்றால் உடற்பயிற்சி செய்து அனுப்புகிறேன் என கூறியுள்ளார்.

எம்.பி. பேசிய வீடியோ கால் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இதனைக் கண்ட அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அவருக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டனர். ..

இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சியினர், மற்றும் எதிர்க்கட்சியினர் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இதனால் ஆந்திரா முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு நெருக்கடி நிலவி வருகிறது. முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி எம்.பி.யை அழைத்து இளம்பெண்ணுடன் வீடியோ காலில் பேசியது சம்பந்தமாக விசாரணை நடத்தினார்.

அப்போது கோரண்ட்லா மாதவ் அந்த வீடியோ காலில் இருப்பது என்னுடைய தலை மட்டுமே உடல் வேறு ஒருவருடையது. தெலுங்கு தேசம் கட்சியினர், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டுமென்று வீடியோவை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர் என தெரிவித்தார்.

இது சம்பந்தமாக ஜெகன்மோகன் ரெட்டி தனது ஆலோசகர் ராமகிருஷ்ணா ரெட்டியிடம் 2 முறை ஆலோசனை நடத்தினார். வீடியோ கால் பேசியது உண்மையாக இருக்கும் பட்சத்தில் கோரண்ட்லா மாதவை கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து பேட்டி அளித்த கோரண்ட்லா மாதவ் கூறியதாவது;-

இந்த சதியின் பின்னணியில் ஒரு செய்தி சேனல் உள்ளது. அவர்கள் மீது அவதூறு வழக்கு தொடரப்போகிறேன். மிரட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக பிரஸ் கவுன்சில்,ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டை அணுக உள்ளேன்.

"எனது நற்பெயரைக் கெடுக்கவும், என்னை சிக்கலில் மாட்டிவிடவும் இந்த அவதூறு பரப்பப்படுகிறது. இந்த சதியின் பின்னணியில் தெலுங்கு தேசம் கட்சி உள்ளது. அவர்களுக்கு தைரியம் இருந்தால், அவர்கள் என்னை நேரடியாக சந்திக்க வேண்டும். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.

இது தொடர்பாக எஸ்பி மற்றும் சைபர் கிரைம் போலீசாரிடமும் ஏற்கனவே புகார் அளித்துள்ளேன். இந்த சதியை போலீசார் விசாரித்து அதன் பின்னணியில் உள்ளவர்களை தண்டிக்க வேண்டும்.

வீடியோ உண்மையானது என நிரூபிக்கப்பட்டால், நானே என் தலையை துண்டித்துக்கொள்வேன்," என்று அவர் கூறினார்.


Next Story