கிறிஸ்தவ ஆசிரமத்தில் கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம்: சக கன்னியாஸ்திரிகள் உள்பட 4 பேர் மீது வழக்கு
மைசூரு கிறிஸ்தவ ஆசிரமத்தில், கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக கன்னியாஸ்திரிகள் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மைசூரு: மைசூரு கிறிஸ்தவ ஆசிரமத்தில், கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக கன்னியாஸ்திரிகள் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பாலியல் தொல்லை
குடகு மாவட்டம் கோணிகுப்பா டவுன் பகுதியில் செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகள் ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமம் கிறிஸ்தவ பேராலயத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு 35-க்கும் மேற்பட்ட செவிதிறன் குறைபாடுள்ள குழந்தைகள் உள்ளனர். இங்கு கன்னியாஸ்திரியாக மார்கரெட் என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு தலைமை ஆசிரியராக பணியில் சேர்ந்தார். இந்த நிலையில் அந்த ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஆசிரமத்தை சேர்ந்தவர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக மார்கரெட்டுக்கு தெரியவந்தது.
இதுகுறித்து ஆசிரம நிர்வாகிகளிடம் அவர் புகார் அளித்தார். ஆனால், அவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை என தெரிகிறது. மேலும், ஆசிரமத்தில் இருந்து மார்கரெட்டை பணிநீக்கம் செய்தனர். இதையடுத்து அவர் மைசூருவில் உள்ள ஆசிரமத்தில் பணியில் சேர்ந்தார்.
கொலை மிரட்டல்
இந்த நிலையில் மார்கரெட், மைசூரு அசோக்புரம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் தன்னுடன் மைசூரு கிறிஸ்துவ ஆசிரமத்தில் பணி செய்து வரும் கன்னியாஸ்திரிகளான பிந்து, அன், தீபா மற்றும் ஆசிரமத்தில் டிரைவர் வேலை செய்பவர்கள் தன்னை கடத்தி சென்று கட்டி வைத்து சித்ரவதை செய்தனர்.மேலும், தனக்கு மயக்க மருந்து செலுத்தி முதலில் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாவும், அவரையடுத்து மற்றொரு நபர் என வரிசையாக பலமுறை பலாத்காரம் செய்ததாகவும் கூறினார். தன்னிடம் இருந்து தங்க சங்கிலி, செல்போன், பணம் ஆகியவற்றையும் திருடிவிட்டு இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டினர் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், தனக்கு விடுத்த கொலை மிரட்டல் தொடர்பாக ஒரு வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டு இருந்தார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
அந்த புகாரின் பேரில் அசோக்புரம் ேபாலீசார் கன்னியாஸ்திரிகளான பிந்து, அன், தீபா மற்றும் ஆசிரம டிரைவர் ஆகியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 4 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.