ஒடிசா ரெயில் விபத்து: ஊழியர் யாரும் தலைமறைவாகவில்லை - ரெயில்வே நிர்வாகம் விளக்கம்


ஒடிசா ரெயில் விபத்து: ஊழியர் யாரும் தலைமறைவாகவில்லை - ரெயில்வே நிர்வாகம் விளக்கம்
x

ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது.

பாலசோர்,

ஒடிசாவில், பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் கடந்த 2-ந் தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரெயில் உள்ளிட்ட 3 ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நேரிட்ட கோர விபத்து, நாட்டையே உலுக்கி உள்ளது.

288 பேரை இதுவரை பலி கொண்ட இந்த சங்கிலித்தொடர் விபத்தின் பின்னணியில் நாசவேலை இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து ரெயில்வே வாரியத்தின் பரிந்துரையின் பேரில் இதில் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்தபோது பணியில் இருந்த சிலரை சிபிஐ தங்களின் வளையத்துக்குள் கொண்டுவந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சிபிஐயின் விசாரணை வளையத்தில் இருந்த சிக்னல் பிரிவு இளநிலை பொறியாளர் அமீர் கான், பாலசோரில் அவர் குடியிருந்த வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகின. இந்த செய்தி ஊடகங்களில் வேகமாக பரவிய நிலையில், ரெயில் விபத்து தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஊழியர் தலைமறைவு என ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மையில்லை என்றும், சிபிஐ விசாரணைக்கு அனைத்து ஊழியர்களும், அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் தென்கிழக்கு ரெயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.


Next Story