ஒடிசா ரெயில் விபத்து: இறந்தவர்களின் படங்கள் இணையத்தில் வெளியீடு


ஒடிசா ரெயில் விபத்து: இறந்தவர்களின் படங்கள் இணையத்தில் வெளியீடு
x

ஒடிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களின் படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

புவனேஸ்வர்,

கொல்கத்தாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசா அருகே தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது. இந்த கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்திருப்பதோடு, பலரும் படுகாயம் அடைந்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், ஒடிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களின் புகைப்படங்கள் மாநில இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. www.srcodisha.nic.in., bmc.gov.in, osdma.org 2ஆகிய இணையதளங்களின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


Next Story