ஒடிசா ரெயில் விபத்து : அரசியல் செய்ய இது நேரமில்லை - மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பேட்டி
அரசியல் செய்ய இது நேரமில்லை என மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
புவனேஷ்வர்,
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில் என 3 ரெயில்கள் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணியளவில் விபத்தில் சிக்கின.
இந்த கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்திருப்பதோடு, பலரும் படுகாயம் அடைந்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் அரசியல் செய்ய இது நேரமில்லை என மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தர்மேந்திர பிரதான் கூறியதாவது ,
ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ரெயில்வே மந்திரி பரிந்துரை செய்துள்ளார். அரசியல் செய்ய இது நேரமில்லை. அரசியல்வாதிகள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்