பெலகாவி மாவட்டத்தின்முதல் பெண் எம்.எல்.ஏ.


பெலகாவி மாவட்டத்தின்முதல் பெண் எம்.எல்.ஏ.
x
தினத்தந்தி 10 April 2023 12:15 AM IST (Updated: 10 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெலகாவி மாவட்டத்தின் முதல் பெண் எம்.எல்.ஏ. சம்பாபாய் கோகலே என்ற பெருமையை பெற்றார்.

பெங்களூரு-

கர்நாடகத்தில் அதிகளவு தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களில் ஒன்று தான் பெலகாவி. இந்த மாவட்டத்தில் மொத்தம் 18 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கர்நாடகத்தில் பெங்களூருவுக்கு அடுத்து அதிக சட்டசபை தொகுதிகளை கொண்ட மாவட்டம் பெலகாவி ஆகும். வீர மங்கைகள் கித்தூர் ராணி சென்னம்மா, பெலவாடி மல்லம்மா ஆகியோர் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த மாவட்டத்தில் இருந்து உருவான முதல் பெண் எம்.எல்.ஏ. சம்பாபாய் கோகலே ஆவார்.

அவர் பற்றிய விவரம் வருமாறு:-

சம்பாபாய் கோகலே கடந்த 1957-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் உக்கேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார். அதைத்தொடர்ந்து, 1962-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சங்கமேஸ்வரா தொகுதியிலும் இருந்து 1967-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காக்வாட் தொகுதியிலும் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு அவர் எம்.எல்.ஏ. ஆனார். தொடர்ந்து 3 முறை தேர்தலில் களம் கண்ட அவர் மாவட்டத்தின் வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story