அணையில் விழுந்த செல்போனை எடுக்க 21 லட்சம் லிட்டர் நீரை வெளியேற்றிய அதிகாரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
அணையில் விழுந்த செல்போனை எடுப்பதற்காக 21 லட்சம் லிட்டர் நீரை வெளியேற்றிய அதிகாரிக்கு ரூ.53 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் கான்கெர் மாவட்டத்தில், கொய்லிபெடா வட்டார உணவுப் பொருள் ஆய்வாளராக இருப்பவர் ராஜேஷ் விஸ்வாஸ். இவர் கடந்த வாரம் கெர்கட்டா-பரல்கோட் நீர்த்தேக்கத்திற்கு சென்ற போது தனது விலை உயர்ந்த செல்போனை அணையில் 15 அடி ஆழ நீரில் தவறவிட்டுள்ளார். தொடர்ந்து தனது போனை மீட்க அணையில் இருந்து சுமார் 10 அடி ஆழத்திற்கு நீரை அவர் வெளியேற்றி இருந்தார்.
இந்த செய்தி தேசிய அளவில் கவனம் பெற்றது. அப்போது வெளியேற்றப்பட்ட தண்ணீரால் எந்தப் பயனும் இல்லை என தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் ராஜேஷ் விஸ்வாஸ் சொல்லி இருந்தார். தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கான்கெர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா சுக்லா இந்த உத்தரவை பிறப்பித்தார். இந்த நிலையில் அந்த அதிகாரிக்கு ரூ. 53 ஆயிரம் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story