குஜராத் சட்டசபை தேர்தல்: பா.ஜனதா முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு கிரிக்கெட் வீரர் ஜடேஜா மனைவிக்கு வாய்ப்பு
குஜராத் சட்டசபை தேர்தலில் 160 பேர் அடங்கிய பா.ஜனதாவின் முதல் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
182 உறுப்பினர் கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 1 மற்றும் 5-ந்தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை தொடங்கி விட்டன. இதனால் தேர்தல் களம் களைகட்டி வருகிறது.
மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க ஆளும் பா.ஜனதா தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக தகுதி வாய்ந்த வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வந்தன.இதில் இறுதிக்கட்டமாக பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மாநில முதல்-மந்திரி பூபேந்திர படேல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இணைந்து வேட்பாளர் பட்டியலை இறுதி செய்தனர்.
ஹர்திக் படேலுக்கு வாய்ப்பு
அதன்படி 160 பேர் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் 84-க்கும், இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் 93 தொகுதிகளில் 76-க்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இதில் முக்கியமாக முதல்-மந்திரி பூபேந்திர படேல் கட்லோடியா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு பெற்று உள்ளார். உள்துறை மந்திரி ஹர்ஷ் சங்கவி மஜுரா தொகுதியில் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்த படேல் இன தலைவர் ஹர்திக் படேலுக்கு விராமம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதைப்போல கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவபாவுக்கு ஜாம்நகர் உத்தம் தொகுதி ஒதுககப்பட்டு இருக்கிறது.
பா.ஜனதாவின் முதல் வேட்பாளர் பட்டியலில் 14 பெண்கள் இடம் பிடித்து உள்ளனர். எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு முறையே 13 மற்றும் 24 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
38 எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பில்லை
மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை என முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானி மற்றும் துணை முதல்-மந்திரி நிதின் படேல் ஆகியோர் நேற்று முன்தினம் அறிவித்து இருந்தனர்.
இவர்கள் இருவர் உள்பட 38 எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கிறது. இதில் 5 பேர் மந்திரி ஆவர்.
இதில், தொழிலாளர் நலத்துறை இணை மந்திரி பிரிஜேஷ் மெர்ஜா முக்கியமானவர் ஆவார். இவர் சமீபத்தில் 135 உயிர்களை பலி வாங்கிய பால விபத்து நடந்த மோர்பி தொகுதி எம்.எல்.ஏ. என்பது குறிப்பிடத்தக்கது.
இதைப்போல சட்டசபை சபாநாயகர் நிமாபென் ஆச்சார்யாவுக்கும் மீண்டும் சீட் வழங்கப்படவில்லை.
160 பேர் அடங்கிய பா.ஜனதாவின் முதல் வேட்பாளர் பட்டியல் கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சில நாடுகள் மற்ற நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தும் உலக வரிசை மீது இந்தியாவுக்கு நம்பிக்கை இல்லை. அனைவருக்கும் பலன் அளிக்கக்கூடிய உலக வரிசையை பற்றித்தான் நாம் சிந்திக்க வேண்டும்.
வலிமையான, வளமான இந்தியாவை மற்ற நாடுகளை பலிகொடுத்து உருவாக்க மாட்டோம். மற்ற நாடுகளுக்கு உதவுவதற்குத்தான் இந்தியா இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.