பஞ்சாப் பாடகரை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு கொண்டாடிய கொலையாளிகள் - வீடியோ


பஞ்சாப் பாடகரை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு கொண்டாடிய கொலையாளிகள் - வீடியோ
x
தினத்தந்தி 4 July 2022 11:22 PM IST (Updated: 4 July 2022 11:24 PM IST)
t-max-icont-min-icon

பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவை சுட்டு கொன்று விட்டு காரில் செல்லும் போது துப்பாக்கிகளை காட்டி கொலையாளிகள் கொண்டாடிய வீடியோ வெளியாகி உள்ளது.

சண்டிகர்,

பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான சித்து மூஸ்வாலா,கடந்த மே 29 ஆம் தேதி தனது காரில் சென்று கொண்டிருந்த போது ரவுடி லாரன்ஸ் பிஸ்னோய் கூட்டாளிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

பஞ்சாபில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியத இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக ரவுடி லாரன்ஸ் பிஸ்னோய் மற்றும் கோல்டி ப்ரார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

இந்த நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு பேரை டெல்லி போலீஸ் கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் அன்கித் சிர்சா மற்றும் சச்சின் பிவானி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேடப்படும் குற்றவாளிகளான இருவரும் லாரன்ஸ் பிஸ்னோய், சச்சின் பிவானி கும்பலை சேர்ந்தவர்கள் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் அதனை சோதனை செய்தனர். அதில், அன்கித் சிர்சா போனில் சித்து மூஸ்வாலாவை சுட்டு கொன்று விட்டு காரில் செல்லும் போது துப்பாக்கிகளை காட்டி கொலையாளிகள் கொண்டாடிய வீடியோ இருந்தது.

அந்த வீடியோவில், அங்கித் சிர்சா, சச்சின் பிவானி மற்றும் தீபக் உள்ளிட்ட 5 பேர் தங்கள் கைகளில் உள்ள துப்பாக்கியை செல்போன் கேமிராவை நோக்கி காண்பித்து, சிரித்து கொண்டும் உள்ளனர்.



Next Story