4 வயது மகளை 4 வது மாடி பால்கனியில் இருந்து வீசிய பெண் சிசிடிவி காட்சிகள்


4 வயது மகளை 4 வது மாடி பால்கனியில் இருந்து வீசிய பெண் சிசிடிவி காட்சிகள்
x
தினத்தந்தி 5 Aug 2022 10:10 AM GMT (Updated: 2022-08-05T15:59:30+05:30)

4 வயது மகளை 4 வது மாடி பால்கனியில் இருந்து வீசிய பெண் இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

பெங்களூரு

கர்நாடக மாநிலம் வடக்கு பெங்களூரு எஸ்ஆர் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இதில் ஒரு பல் மருத்துவர் மற்றும் அவரது கணவர் ஒரு மென்பொருள் பொறியாளர் வசித்து வந்தனர். இவர்களுக்கு நான்கு வயதில் மகள் இருந்தார். சிறுமி செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடால் பாதிக்கபட்டு இருந்தார். இதனால் தாயார் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அந்த பெண் தனது 4 வயது மகளை 4 வது மாடி பால்கனியில் இருந்து தூக்கி எறிந்து உள்ளார்.பின்னர் அவரும் குதிக்க முடிவு செய்து இருந்தார். ஆனால் அதற்குள் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டனர். குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாயின் மனநலம் குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஸ்ரீனிவாஸ் கவுடா தெரிவித்தார்.
Next Story