கிணற்றுக்குள் விழுந்த சிறுவன்; நொடியும் யோசிக்காமல் கிணற்றுக்குள் குதித்த நபர் - பரபரப்பு வீடியோ


கிணற்றுக்குள் விழுந்த சிறுவன்; நொடியும் யோசிக்காமல் கிணற்றுக்குள் குதித்த நபர் - பரபரப்பு வீடியோ
x

கிணற்றின் மேல் அமைக்கப்பட்டிருந்த பலகை மீது ஏறி சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தான்.

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் டமொஹ் மாவட்டத்தில் பவன் என்பவரின் வீடு உள்ளது. வீட்டிற்கு உள்ளேயே கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இருந்து வீட்டிற்கு தேவையான தண்ணீர் எடுப்பது வழக்கம். 40 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றின் மேல் புறம் இரும்பாலான பலகையுடன் மூடி, திறக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பவன் வீட்டிற்குள் 2 சிறுவர்கள் நேற்று விளையாடிக்கொண்டிருந்தனர். அதில், ஒரு சிறுவன் கிணற்றின் மீது ஏறி விளையாடியுள்ளான்.

அப்போது திடீரென கிணற்றின் மேல் அமைக்கப்பட்டிருந்த இரும்பு பலகை திறந்து சிறுவன் 40 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்தான்.

இதைப்பார்த்த மற்றொரு சிறுவன் அலறியபடி உதவிகோரியுள்ளான். பின்னர், பவன் வீட்டிற்கு சென்று உதவி கேட்டுள்ளான். வீட்டில் இருந்து வேகமாக ஓடி வந்த சிறுவனின் உறவினர்கள் கிணற்றுக்குள் விழுந்த மற்றொரு சிறுவனை காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.

அப்போது, வீட்டில் இருந்து வந்த பவன் நொடியும் யோசிக்காமல் சிறுவனை காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்தார். பின்னர், கிணற்றில் தண்ணீர் தத்தளித்த சிறுவனை மீட்ட பவன் கயிறு மூலம் சிறுவனை கிணற்றில் இருந்து வெளியே கொண்டு வந்தார்.

சிறுவன் எந்த வித காயமும் இன்றி உயிருடன் மீட்கப்பட்டான். சிறுவனை மீட்ட பவனும் கிணற்றில் இருந்து வெளியே வந்தார். சிறுவனை மீட்ட பவனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்வு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.




Next Story